96 : 1
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக!
96 : 2
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ
அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்.
96 : 3
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
படிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்.
96 : 4
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
96 : 5
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ
மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்.
96 : 6
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ
அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,
96 : 7
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
96 : 8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
நிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது.
96 : 9
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
(நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக!
96 : 10
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்?
96 : 11
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
நீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
96 : 12
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
96 : 13
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
நீர் அறிவிப்பீராக! அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,
96 : 14
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96 : 15
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).
96 : 16
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ
பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
96 : 17
فَلْيَدْعُ نَادِيَهُۥ
ஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96 : 18
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
96 : 19
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
அவ்வாறல்ல! அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (வணக்க வழிபாடுகள் மூலம் அவன் பக்கம்) நெருங்குவீராக!