83 : 1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
மோசடிக்காரர்களுக்கு நாசம்தான்.
83 : 2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள்.
83 : 3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்).
83 : 4
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
“நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா?
83 : 5
لِيَوْمٍ عَظِيمٍ
மகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்).
83 : 6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.
83 : 7
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
அவ்வாறல்ல! நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.
83 : 8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
இன்னும், சிஜ்ஜீன் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
83 : 9
كِتَـٰبٌ مَّرْقُومٌ
(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்.
83 : 10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83 : 11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
அவர்கள் கூலி (கொடுக்கப்படும்) நாளைப் பொய்ப்பிக்கிறார்கள்.
83 : 12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
அதைப் பொய்ப்பிக்க மாட்டார், ஒவ்வொரு பெரும் பாவியும் எல்லை மீறுகிறவனும் தவிர!
83 : 13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
அவனுக்கு முன்னர் நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.
83 : 14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
அவ்வாறல்ல! மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது கறையாகப் படிந்து மூடிவிட்டன.
83 : 15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
அவ்வாறல்ல! நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் திட்டமாக தடுக்கப்படுவார்கள். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)
83 : 16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீயில் நிரந்தரமாக) எரியக் கூடியவர்கள்தான்.
83 : 17
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
பிறகு, “நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த (நாளான)து இதுதான்’’ என்று (அவர்களுக்கு) கூறப்படும்.
83 : 18
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
அவ்வாறல்ல! நிச்சயமாக நல்லோரின் பதிவேடு திட்டமாக இல்லிய்யூனில் இருக்கும்.
83 : 19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
83 : 20
كِتَـٰبٌ مَّرْقُومٌ
அது (நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்.
83 : 21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
(அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (வான)வர்கள் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.
83 : 22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்.
83 : 23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
கட்டில்கள் மீது (சாய்ந்தவர்களாக சொர்க்கத்தின் அருட்கொடைகளை) கண்டுகளிப்பார்கள்.
83 : 24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (பிரகாசத்தை, அழகை நபியே! நீர்) அறிவீர்.
83 : 25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து (அவர்கள் விரும்பியதை, விரும்பிய அளவு) புகட்டப்படுவார்கள்.
83 : 26
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.
83 : 27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
இன்னும் அதன் கலவை தஸ்னீமிலிருந்து இருக்கும்.
83 : 28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
(தஸ்னீம் அது) ஒரு நீரூற்றாகும், (அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (நல்ல)வர்கள் அதில் பருகுவார்கள்.
83 : 29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
நிச்சயமாக குற்றவாளிகள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து (கேலி செய்து) சிரிப்பவர்களாக இருந்தார்கள்.
83 : 30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
இன்னும், அவர்கள், இவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கேலியாக கண் சாடை செய்கிறார்கள்.
83 : 31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
இன்னும், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பும்போது (நம்பிக்கையாளர்களை கேலி செய்தது பற்றி) மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகிறார்கள்.
83 : 32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
இன்னும், அவர்கள் இவர்களைப் பார்க்கும்போது “நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்’’ எனக் கூறுகிறார்கள்.
83 : 33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
(இக்குற்றவாளிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!
83 : 34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
ஆக, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
83 : 35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
கட்டில்கள் மீது அமர்ந்தவர்களாக (அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.
83 : 36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா (இல்லையா)?